
தொடர்கள்..
நான் வாழ்ந்த சூழலில் என் கண்முன்னே வாழந்த சில பெண்களின் கதையை பெயரின்றி உறவு முறைகளில் சொல்ல நினைக்கிறேன். இவர்கள் எல்லாருமே எங்களூர் தேவதைகள் தான். இந்த தேவதைகளுக்கு சிறகுகளுண்டு. அதே விரித்து அவர்கள் படபடத்து பறந்த கதைகளுண்டு. இந்த தேவதைகளுக்கு கண்ணீர் உண்டு. அக்கண்ணீர் என்னுடைய பல காயங்களுக்கு மருந்தாய் மாறியிருக்கின்றன. அவர்களின் அந்தந்த தருணங்களை அப்படியப்படியே சொல்கிறேன்.
ஒரு கவிதையை நான் இப்படியானதொரு கால கட்டத்தின் சூழலில் எழுதியதால் இப்படியெழுதினேன் என ஒரு தன்னிலை விளக்கம்தான்.
இன்னொரு விசயம் என்னவென்றால், ஒரு கவிதையைப் படிக்கும் பொழுதில் வாசகனுக்கு கவிதைக்கான சூழல் இப்படித்தான் இருந்திருக்குமென ஒரு கற்பனை வரும். அது போல் நீங்கள் என் கவிதையை வாசிக்கும் பொழிதில் உங்களுக்கு வந்த கற்பனையும் நான் கூறியிருக்கும் சூழ்நிலையும் ஒத்துப்போகிறதாவென நீங்கள் ஒரு ஒப்பீடு செய்து கொள்ள முடியும்
மியூச்சுவல் ஃபண்டை
எப்படித் தேர்ந்தெடுப்பது...?
எப்படி முதலீடு செய்வேது... ??
இது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்ல எழுதப்பட்ட ஒரு தொடர்..
அமேஸான் கிண்டில் பதிப்பாகவும் வெளியாகியிருக்கிறது.