top of page
நெற்றியில் நீயிட்ட முத்தம்
கவிதை

எனக்கான இவ்விடியல்
என் நெற்றியில்
நீ அளித்த முத்ததில் விடிந்தது.
இனிய பூபாளத்தை நெஞ்சில்
இழைத்துவிட்டுப்போகிறது அம்முத்தம்.
நெற்றியில் இருக்கும்
உன்னுதட்டு ஈரத்தை
இன்னும் துடைக்காமல் திரிகிறேன்.
தன் கையில் இனிப்பொன்றைப்
பொத்தி வைத்திருக்கும் குழந்தையின்
குதூகலத்தில் அதனைக் காத்து
நிற்கிறேன் நான்.
நிச்சயம் அதன் சுவை இனிப்பாகவே
இருக்க வேண்டும்.
நெற்றியோ சுவையறியும் திறனற்றது.
நாளைய விடியலில்
சுவையறியும் பொறியில்
உன் முத்தத்தை இட்டுவிடு.
அதுவெதுவென உனக்குச் சுட்டித்தர
தேவையில்லைதானே என் கண்மணி.
bottom of page