top of page
சாலச் சுகம்.
கவிதை

இடமொரு பாகமாய்
நிறைந்தவளின் பரிதவிப்பு
எப்போதும் மின்னும்
கண்டத்தில் நீலமாய்.
சடைவார் குழலில் ஒளிந்து
அமர்ந்தவளுக்கோ
இரைச்சலுடன் பாயும் வேகம்.
ஊன்றிய அடியின் கீழிருக்கும்
முயலகனும் திமிறியெழப் பார்க்கின்றான்.
கால் மாற்றியாடுதல் என்றுமே
அத்தனை எளிதானதாய் இல்லை.
அம்பலம் நீங்கி
பிணங்களெரியும் நதிக் கரையில்
கஞ்சா புகைத்து
மயங்கிக் கிடத்தல் சாலச் சுகம்.
bottom of page