top of page
கொன்றை சூடியவன்
கவிதை

பாதையெங்கும் விரவிக் கிடக்கும்
சரக்கொன்றை பூக்களை
வலிக்கும் மனதோடு
கூட்டிக்கூட்டிக் குவிக்கிறார்
கூட்டும் பணியாளர்.
சின்னச்சின்ன இடைவெளிகளில்
புதிது புதிதாய் தோன்றுகின்றன
மஞ்சள் பூக் குன்றங்கள்.
சன்னமாய் வீசுகிறது காற்று.
கலைந்து பறக்கின்றன
கோபுரங்களின் தங்கக் கலசங்கள்.
சிலிர்த்து உதிர்க்கிறது மரம்
மேலும் பல கொன்றைகளை
தரை மீதும் பணியாளர் தலை மீதும்.
bottom of page