top of page
எல்லாமுமே காதல் தான்
கவிதை

முன்னாள் காதலியின்
முகச் சாயலில் இருந்ததால்
நான் இவளைக் காதலிக்கத்
தொடங்கினேன்.
சிரிக்கும் போது விழும்
கன்னக்குழியும் கூடவே
உதட்டுச் சுழிப்பும்
அவளுக்கும் “அவளுக்கும்”
ஒன்றாய் இருப்பதை
பார்த்த நாளில் அவளையும்
காதலிக்கத் துவங்கினேன்.
மூன்றாவதாய் வந்தவளோ
“அவளின்” பெயர் தாங்கியே வந்ததால்
உவளும் என் காதலியானாள்.
எல்லாக் காதலிகளிடமும்
நான் இன்றளவும்
எனை நீங்கியபின்னும்
நீக்கமற நிறைந்திருக்கும்
“அவளை”யேத்
தேடிக் கொண்டலைகிறேன்.
எங்கெங்கும்
யார்யாரைக் காணினும்
அங்கங்கும் அவளே வந்து நின்றால்
என் குற்றமென்னவென
சொல்லடா தாண்டவக்கோனே..
bottom of page