top of page
இன்னுமொரு காதல்
கவிதை

இன்று நான் மீண்டும்
காதலிக்கத் துவங்கியிருக்கிறேன்.
அதோ
முன்னால் செல்லும் மகிழுந்தின்
பின்புறக் கண்ணாடி வழி
உட்புக முயலும்
வெயிலின் வெப்பத்தைத் தடுக்க
ஒட்டப் பட்டிருக்குமொரு
விளம்பரப் பதாகையில்
இடப் புறமாய் தலை சாய்த்து
சிரிக்கும் வித்யா பாலனின்
இதழ் மலர்ந்த அப்
புன்னகையைப் பார்க்கையில்
நானெப்படி காதலில் விழாமல்
இருக்க முடியும்.
நேற்று பூத்த மலர்
இன்றுதிர்ந்த துயரில்
மீண்டுமொரு
மொட்டவிழ்காமலா இருக்கும்
எந்தவொரு ரோஜாச் செடியும்.
bottom of page