சமூகத்தின் ஆகப் பெரிய வன்முறைகளில் முக்கியமான வன்முறை என்பது குடும்பம் என்ற அமைப்புதான் என்பது என்னுடைய கருத்து. மனிதன் சக மனிதனை ஒடுக்க சாதியை கண்டு பிடித்தான். சக மனுஷியை ஒடுக்கவே குடும்பத்தைக் கண்டு பிடித்தான் என்றே நான் உறுதியாக நம்புகிறேன்.
சுரேஷ் பரதனின் எழுத்துகள் எப்போதும் என்னை உடன் அழைத்துச் செல்பவை. எளிய நடையில் காலத்துக்கு முற்பட்ட நிகழ்வுகளை பழுப்பு நிறமேற்றி சொல்லக் கூடியவை.. சுரேஷின் கதைகளில் வரும் அனைத்து தளங்களிலும் நான் வாழ்ந்திருக்கிறேன். சுரேஷின் கதை மாந்தர்கள் எப்போதும் எனக்குப் பரிச்சயமானவர்களாகவே இருக்கிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் சுரேஷின் எழுத்துகளிலும் சுரேஷின் வாழ்விலும் கொஞ்சம் நான் இருப்பது போலத்தான் தெரிகிறது.
-- கவிஞர், எழுத்தாளர், திரைக்கதையாசிரியர், நந்தன்ஶ்ரீதரன்
சந்நதம்
Currently we are shipping paper back books within India only.