சொற்கள் ஆயிரம் கால்கள். கவிதை மண்டபம். ஆயிரம் கால் மண்டபம்.ஆயிரம் அனுபவங்களை ‘கரிமா’வாய்க் குறுக்கி ஒற்றைக் கல்லாய் மாற்றும் அஷ்டமாசித்தி கைவரப்பெற்றவன் கவிஞன்.சுரேஷின் இந்தக் கவிதைத் தொகுப்பு ஒற்றைக் கல் மண்டபம். அனுபவங்களின் சக்தியால் பெரும் சுமையைத் தாங்கி நிற்பது. ஒரு சொல்லையும் அது தோன்றிய கணத்தையும் அணைத்துக் கொண்டு உருகுவது. அதனாலேயே என்றைக்கும் நிகழும் கவிதைகளாக மனதில் நிற்பது. அதனாலேயே இது இவருடைய நூறாவது கவிதைத் தொகுப்போ என்று வியக்கவும் வைக்கிறது.
-- ஸ்ரீபதி பத்மனாபா.
ஊர்நடுவே ஒரு வனதேவதை
SKU: 0001
₹100.00 Regular Price
₹75.00Sale Price
ஊர் நடுவே ஒரு வனதேவதை ~ கவிதைகள் ~ சுரேஷ் பரதன்
முதல் பதிப்பு- ஜனவரி 2018