அகக்குரலாய் ஒலிக்கும் மொழியின் குரல்
வாழ்க்கை பயணம் நேர்கோட்டுப் பாதையில் செல்வதன்று. அவ்விதமாயின் அது சுவாரஸ்யமற்றதாக மட்டுமன்றி இலக்கைக் கணிப்பதில் சிரமத்தையும் உருவாக்கும். இலக்கு வெகு தொலைவாகவோ சிலசமயம் முடிவிலியாகவோ மாறிவிடும்.
இயல்பு வாழ்க்கை பல திருப்பங்களைக் கொண்டது. திருப்பங்களே பல் புதிய திசைகளைக் காட்டவல்லவை. இப்படியும் அப்படியுமாக மாறி மாறி பயணிக்கிற போதுதான், இலக்குகள் எளிதாகின்றன. அதே சமயம் முட்டுச் சந்துகளும் வரத் தான் செய்கின்றன.
சுரேஷ்பரதன் படைத்திருக்கும் 'ஈரூசற்தாண்டவம்' கவிதைக் களஞ்சியத்தில் உள்ள கவிதைகள் இந்த மாற்றங்களை அவதானித்து கேள்விகளை எழுப்புவனவாகவும் கிடைக்கும் பதில்களில் புதிய திருப்பம் புலப்படுவதைப் புரிந்துகொள்ள யத்தனைப்பவையாகவும் இருக்கின்றன.
-- கவிஞர் தமிழ் மணவாளன்.
ஈரூசற்தாண்டவம்
SKU: 12345
₹120.00Price