"தன்னை சுற்றி வாழ்ந்த அல்லது தன் வாழ்வில் சந்தித்த எட்டு தேவதைகள் பற்றி புத்தகத்தில் ஆசிரியர் எழுதியிருப்பார். ஒவ்வொரு தேவதைகள் பற்றியும் நாம் படிக்கும் பொழுது நம்மை சுற்றிலும் வாழ்ந்த சிலரின் முகங்கள் நினைவில் வந்தது சென்றது என்றால் மிகையல்ல. அப்படித்தான் ஏழாம் தேவதையைப் பற்றி அவர் எழுதியது என் நெருங்கிய ஒரு உறவை என் கண்முன் நிறுத்தியது. அதனாலேயே புத்தகத்தை குறித்து நிச்சயம் எழுத வேண்டுமென்று நான் முடிவு செய்தேன். ஏனெனில் அவ்வாறு தாய்மை உள்ளம் படைத்தவர்கள் வெகு சிலர் மாத்திரமே. என் கண் முன் வாழ்ந்து மறைந்த தேவதை அவர்கள். அதே போல ஒரு தேவதையைப் பற்றி படித்த பொழுது இனம்புரியாத ஒரு மகிழ்ச்சியும் சந்தோஷமும் என்னில் உருவானது. "
RAJA LAKSHMI- Active Book Reviewer
தேவதைக் கதைகள்
SKU: 0002
₹49.00Price