சந்நதம் நூல் குறித்த வாசகர்கள் பார்வை - 1.
- Suresh Barathan
- Jun 12, 2023
- 2 min read

சந்நதம் என்றால் சாமிவந்து ஆடுதல் என பொருளாம்... உண்மையில் சாமிவந்து ஆடிருக்காரு எழுத்தாளர்.
அந்த காலத்து படங்களில் ஒரு பெண் இரயிலில் விழுவதாக காட்சி வரும். தூரத்தில் ரயில் வரும்.... அந்த பெண் தண்டவாளத்தில் நடப்பாள்.. ரயிலின் சக்கரங்களை காட்டுவார்கள்... பின் அந்த பெண்ணின் கால்கள்.. பிறகு ரயில்.. அடுத்து அந்த பெண்.. சைடு வியூ... டாப் வியூ... ஸ்டெயிட் வியூ... என மாற்றி மாற்றி காட்டுவார்கள்... காட்டிக்கிட்டே இருப்பார்கள்.... இதெல்லாம் பார்வையாளருக்கு அந்த பதட்டத்தை கொடுப்பதற்காகவாம்...
அலைபாயுதே படத்தில் அவள் சாலையை கடப்பாள்... ஒரு கார் மேதி பறந்து விழுவாள். அந்த காட்சி ஏற்படுத்தும் பாதிப்புதான் அதிகம். அதன் பின் வரும் பல படங்களில் இதுபோன்றே காட்சிப்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
ஒரு நிகழ்வை சற்றென்று காட்சிப்படுத்துவதும்... அதன் மூலம் உணர்வுகளை தொடுவதும் சிறப்பானதும் கடினமானதும்...
அதே காட்சியில் அந்த கார் வேகமாய் அருகில் வர... அவள் பயந்து மிளர அப்படியே வணக்கம் என முடித்துவிட்டால் எப்படி இருக்கும். அப்படித்தான் இவரின் பல கதைகள் இருக்கின்றன.
அனைத்து கதையிலும் ஒரு பெண் இருக்கிறாள். பெண்ணின் உணர்வுகளை ஒரு ஆண் எழுதுவது சுவாரசியமானது, கடினமானது, அழகானது. அற்புதமானது.
முக்கியமாக ஒன்றை சொல்லவேண்டும். இந்த கதைகளுக்காக முன்னுரை (அணிந்துரை) எழுதிய திரு. நந்தன் ஸ்ரீதரன். அவர்கள் ஒற்றை வரியில் மொத்த கதைகளைப்பற்றியும் அறிமுகப்படுத்திவிட்டார்.
"சகமனிதனை ஒடுக்க சாதியைக் கண்டுபிடித்தான், சகமனுசியை ஒடுக்க குடும்பத்தைக் கண்டுபிடித்தான்."
.....
ஒரு சிறிய நிகழ்வை காட்சிப்படுத்தி, அதன் வழியே கதையாடுகிறது கதாபாத்திரங்கள்.
சாமிவந்து ஆடும் பெரியம்மா, அவளிடம் குறி கேட்கும் குடும்பம். அது தான் காட்சி அதுதான் கதை... ஆனால் மனதைத் தொடுகிறது.
ஏன் அவள் புன்னகைப்பதில்லை என ஒரு கதையில் அவளை விசாரிக்கிறார் எழுத்தாளர் அதற்கு அவள் சொல்லும் காரணங்கள் தான் ஒருகதை... ஆனால் மனதை பிசைகிறது... கண்ணீரை காணிக்கையாக்காமல் அடுத்த கதைக்கு செல்லமுடியாது...
அடுத்ததாக, அந்த மதினிக்கு ஒரு ரோஜா வாங்கி கொடுக்கனும். இன்னும் எத்தனை நாள் தான் இப்படியே வாழ்ந்து தொலையனுமுனு தெரியல...
இப்படி ஒவ்வொரு கதைக்கும் ஒரு வரி எழுதலாம். ஆனால் அது போதாது.
ஒரு கதையின் முடிவில் அதனை வாசிக்கும் நம் மனதின் அழுக்கை நமக்கே காட்டி (நம்மை செருப்பால அடிச்சுட்டார்) நம் மீதான நம் எண்ணத்தை நமக்கே கேள்வி கேட்க வைத்துவிட்டார். ஒரு வாய் சோறு கிடைப்பது அவ்வளவு எளிதல்ல...
இறந்து போனவர்கள் கதை சொல்வதாய் இரு கதைகள் இருக்கின்றன... ஒன்று மழை மற்றொன்று எரிமலை... அதுவும் கடைசியாக அவளைக் கொன்றது யார்? ஒருவேளை நாம் தானா? அந்த நேரத்தில் நாம் ஏன் அங்கு போனோம்??.
...
செக் மேட்... இனி எங்கும் நகரவே முடியாது?. சிலைபோல அப்படியே நிற்கவேண்டியதுதான். வேறு வழியே இல்லை... அகிலாக்கள் வரும்வரை... இந்த கதையை படித்துவிட்டு வேறு எதுவும் செய்யமுடியாமல், இரவின் தூக்கத்தை தொலைத்து நானும் அந்த கோமா மாதியே நின்றுகொண்டிருக்கிறேன்.
அடுத்து இரு கதைகளை இன்னும் வாசிக்காமல்... அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை.
....
தொடர்கதைகளை வாசிக்கும் போதும், வெப் சீரீஸ் பார்க்கும் போதும் அடுத்த அத்தியாயத்தை பார்க்க/வாசிக்க ஒரு தூண்டுதல் ஏற்படும் அல்லவா அதுபோல அடுத்தடுத்த கதைகளை வாசிக்க நம்மை தூண்டிவிடுகிறது இந்த தொகுப்பு...
...
சமீபத்தில் நான் வாசித்த சிறுகதை தொகுப்பில் இதுதான் மிகச்சிறந்த தொகுப்பாக அமைந்திருக்கிறது.
வாழ்த்துகளும் வணக்கங்களும் ஆசிரியரே....
இந்த நூலை வெளியிட்ட சுவடு பதிப்பகத்திற்கும் Nallu R Lingam . வாசிக்க பரிந்துரை செய்த, வாங்கி கூரியரும் அனுப்பிய பிரித்தீக்கும் Preethi Selvin . கோடான கோடி நன்றிகள்.
..... இந்த நூலை பெறுவதற்கு... 9551065500 என்ற எண்ணிற்கு வாட்ஸஃப் செய்யுங்கள்
... சேது ...
Comments