திருநெல்வேலி அத்தைமார் கதைகள்.
- Suresh Barathan
- Feb 27, 2023
- 2 min read

கதை - 1
அந்தக் காலத்துல திருநெல்வேலியில, குறிப்பா எங்க ஏரியாவுல, (அவ்வளவு தான் நம்ம ரீச்) இருந்த ரோமியோஸ் எல்லா பயலுகளும் சாதி பாத்து பொண்ணுகளை கரெக்ட் பண்ணிட்டு இருந்தானுங்க. ஏன்னு கேட்டா, லைன் கெடைச்சசுட்டுன்னா மேரேஜ் கிளியராயிடும்ல மச்சின்னு உருட்டுனானுங்க. நெறைய பேருக்கு அது நடக்கவும் செஞ்சுச்சு. ஆனா சில காதல்கள் பலவித சுவாரஸ்ய டிவிஸ்டுகளையும் சந்திச்சு பணாலான விசயங்களும் நடந்தது.
அப்படி சாதி பாத்து ஒரு பொண்ணை செலெக்ட் பண்ணின ஒரு பையன் ஸ்ட்ரெய்ட்டா பொண்ணோட அம்மாவை அப்பாவை அத்தை மாமா முறை சொல்லி கூப்பிட்டு பழக ஆரம்பிச்சான். (அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்கா போடுறானாம்.) அவங்க வீட்டுக்கு அப்பப்ப ஏதாவது காரணங்களை உண்டாக்கி போக வர இருந்த நம்ம பயலை அந்த பொண்ணு சுத்தமா கண்டுக்கவே இல்லை. இவனும் கொடாக்கண்டனாக அத்தை உங்க பொண்ணு எவ்ளோ அமைதியா அடக்க ஒடுக்கமா தானுண்டு தான் வேலையுண்டுன்னு இருக்காங்க பாருங்கன்னு ஒரு குட் இம்பரஸனுக்காக அந்த பொண்ணு காது படவே சொல்லியிருக்கான். அதுக்கு அந்த அத்தையும்
ஆமாப்பா.. அவ அப்படித்தான். எப்பயுமே யாருகிட்டேயும் பேசுறதே இல்லை.. இரு.. கூப்பிட்டு ஓங்கிட்ட ரெண்டு வார்த்தை பேசச் சொல்லுதேன்.
அப்படின்னு சொன்ன உடனே நம்ம பய, தௌசண்ட் வயலின் பேக்ரவுண்ட் ம்யூஸிக்குல மனசெல்லாம் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆன்னு வாய் பொளந்து காத்திருக்க..
அந்த அத்தை உள்ளுக்குள்ள இருந்த தன் மகளை பாத்து..
ஏம்ட்டி, இத்த புள்ள எத்தனை நாளு நம்மூட்டுக்கு வந்து போயிட்டு இருக்கு.. நீயும் போகையில வாரையில பாத்தும் பாக்காத மாதிரி இருக்க.. வீட்டுக்கு வர்ற புள்ளைகிட்ட வந்து ஒரு வாரத்தை “அண்ணே நல்லாயிருக்கீங்களா.. காபித் தண்ணி சாப்பிடுறீங்களாண்ணே”ன்னு கேட்டா ஒன் வாய்முத்து உதுந்தா போயிரும்
அப்படின்னு குரல் கொடுத்துச்சாம்.
அப்புறமா நம்ம பய அங்கிட்டு போனான்றீங்க..
கதை - 2
இப்படித்தான் ஒரே சாதியிலேயே ஒரு பொண்ணும் பையனும் காதலிச்சுட்டு இருந்தாங்க..
ஒரு நாள் யதேச்சையா அந்தப் பொண்ணு அவனை தான் வீட்டுக்கு கூட்டிட்டுப் போனாப்பல..
எடுத்த எடுப்புலேயே தன்னோட காதல் சமாச்சாரத்தை பேசமுடியாம சுத்தி வளைச்சு பேசிட்டு இருந்த பயகிட்ட அந்தப் பொண்ணோட அம்மா அவனோட குலம் கோத்திரமெல்லாம் விசாரிக்க ஆரம்பிச்சாங்க..
பயபுள்ளையும் தன் தாத்தா யாரு., அவருக்கு எந்த ஊரு., பாட்டி யாரு.., அவங்க எந்த ஊரு, தாத்தா கூட பொறந்தவங்க யார்யாரு..அவருக்கு பொறந்தவங்க யார்யாரு அவங்களுக்கு பொறந்தவங்க யார்யாருன்னு கிட்டத்தட்ட தன்னோட பேமிலி ட்ரீயை வாயிலேயே வரைஞ்சு காம்பிச்சான்.
எல்லாத்தையும் பொறுமையா கேட்டுட்டு அந்த அத்தை சொன்னாங்க..
ஓ.. அப்படியா.. உங்க தாத்தாவோட ஒன்னு விட்ட தம்பியோட மருமகளோட நாத்தனாருக்கு இவளோட அப்பாவோட தாத்தாவோட சகலையோட பேரப்புள்ளையைத் தான் கட்டியிருக்கு.. அந்த வகையில பாத்தா இவ அப்பாவும் நீங்களும் அண்ணந்தம்பி முறையில்லா வருது.. ரொம்ப நெருங்கிட்டோம் கொழுந்தனாரே..
ஏட்டீ.. இது ஒனக்கு சித்தப்பா முறையில்லா..
Comments