top of page

Online Shopping

உலகின் பழமையான ஆன்லைன் ஷாப்பிங்க் இணைய தளங்களில்முதன்மையானது அமேஸான் டாட் காம். ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1995. வாஷிங்டன்னைச் சார்ந்த Jeff Bezos 1994ம் ஆண்டு ஜூலை மாதம் அந்தகம்பனியைத் துவங்கினார். முதலில் புத்தகங்களையும் அதன் பின் எலைக்ட்ரானிக்ஐட்டங்களையும் விற்கத் துவங்கியது அமேஸான். பின்னர்தான் படிப்படியானவளர்சசி கண்டு இன்றைய நிலையை அடைந்திருக்கிறது.


1971-72 ல் ARPANET நிறுவனம் Massachusetts Institute of Technologyக்குCannabis எனும் செடிவகைகளை Stanford Intelligence Laboratoryயிலிருந்துதருவித்துக் கொடுத்ததைத் தான் முதல் ஈ காமெர்ஸ் வர்ததகம் என்று இன்றளவும்உலகம் ஒத்துக்கொள்கிறது.  அதன்பின் 1981ல் இங்கிலாந்தின் Thomson Holidays முதன்முதல் B2B எனும் பிஸனஸ் டூ பிஸினஸ்  வர்த்தகத்தைஅறிமுகப்படுத்தியது.  அதைத் தொடர்ந்து 1982ல் ஃப்ரான்ஸில் France Telecom நிறுவனம் Minitel எனும் ப்ராடக்டை தன் தேசம் முழுவதும் ஆன்லைனில் விற்றது. இவையெல்லாம் வர்த்தகர்களுக்கிடையிலான வர்த்தகங்களே. அதாவதுநேரடியான வீட்டு உபயோகிப்பாளர்கள் பயனுறவில்லை.


மேலும் இந்த ஆன்லைன் வர்த்தகமெல்லாம் டெலி ஷாப்பிங் வகையறாக்கள் தாம்.


உலகின் முதல் ஹோம் ஷாப்பர் 72 வயது இங்கிலாந்து பெண்மணி. Mrs. Snowball. Tesco எனும் பிரிட்டிஷ் பலசரக்கு விற்பனையகம் துவங்கிய டெலி ஷாப்பிங்கின்முதல் கஸ்டமர் இவர். வருடம் 1984.  இணையதளம் கண்டுபிடிக்கப்படும் முன்னர்.


1990ல் Sir Timothy John Berners Lee என்ற TimBL முதன்முதலில் World Wide Web ஐ கண்டுபிடிக்கிறார். 1992ல் அமெரிக்காவின் க்ளீவ்லேண்டைச் சார்ந்தBooks Stacks Unlimited கம்பனி முதன்முதல் ஆன்லைன் சைட்டான www . book . com என்ற இணையதளத்தை ஆர்மபித்தது. அதுவும் க்ரெடிட் கார்ட் ப்ராசஸிங்வசதியுடன்.


அதன்பின் தான் அமேஸான் களத்தில் இறங்கியது.  அமேஸானைத் தொடர்ந்துOnline Auction site ஆக 1995ல் களமிறங்கியது e-bay. மூன்றாவதாககளமிறங்கியது ஆஸ்திரேலியாவின் SysOp கம்பனி.  இத்த கம்பனி ரெடிமேட்Electronic Store Front software தயாரித்து விற்கத் துவங்கியது. 1999ல்சைனாவின் அலிபாபா க்ரூப்பும் ஈ-காமெர்ஸில் அடியெடுத்து வைத்தது.


1999 - 2004 வரையிலான கால கட்டத்தை Dot Com Bubble என்கிறார்கள். அந்தகால கட்டத்தில் வியாபார இணைய தளங்களின் அறிமுகம் மற்றும் பெருவளர்ச்சிநிறைந்த காலமாய் இருந்திருக்கிறது. அன்றைய மதிப்பிலேயே இணைய தளவிற்பனை 150 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்திருக்கிறது.


ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராமராய் நானும் அந்தத் தொடரோட்டத்தில் சிறு பங்குவகித்திருக்கிறேன் என்று சொல்லலாம்.


1999 ஜூலை முதல் 2001 அக்டோபர் வரை நான் வேலை பார்த்ததிருநெல்வேலியைச் சார்ந்த Global Software Solution நிறுவனம் அமெரிக்காவின்டென்னஸி (Tennessee) மாகாணத்தைச் சார்ந்த Precept Ministry எனும் கிறித்துவமிஷனரிக்காக புத்தகங்களை  விற்கும் ஷாப்பிங் இணையதளத்தை

உருவாக்கியது. அதில் என்னுடைய பங்கும் உண்டு. அந்த ஈ காமர்ஸ் ப்ரோக்ராம்டீமில் நானும் ஒரு மெம்பர். எங்கள் டீம் லிடர் மிஸ்டர் ஃப்ரெட்ரிக் மோனி. அருமையான டீம் லீடர். இன்றளவும் நட்பில் இருப்பவர். அப்போது  எங்களுக்குஇன்ஸ்பிரேஷனாக அமேஸான் ஸைட் தான் இருந்தது. இரண்டாயிரத்திலேயேநாங்கள் Payment Gatewayக்கெல்லாம் ப்ரோக்ராம் எழுதியிருக்கிறோம். அதையெல்லாம் நினைவுகூர்கையில் நிறைவாகவே உணர்கிறேன். மேலும் உலகின்மிக முக்கிய நிகழ்வொன்றில் சிறு பங்காய் நம் உழைப்பும் உள்ளதெனும் போதுபெரு மகிழ்வாய் இருக்கத்தான் செய்கிறது.


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

CONTACT

Tel: 9810488582| Tel: 7011144631 | sureshbarathan@gmail.com

Sign Up for Stay Connected

Thanks for submitting!

Follow me:

  • Black Facebook Icon
  • Black Twitter Icon

© 2022 by Suresh Barathan

bottom of page