இசை அரசனுக்கு பிறந்த நாள்.
- Suresh Barathan
- Dec 24, 2023
- 1 min read

விரல் சொடுக்குகளில் பாடல்களை கேட்டுவிட முடிகிற இன்றைய காலத்துக்கு முன்பு பண்பலைவரிசைகள் பிறக்காதவொரு கால கட்டத்தில் வானொலிகளின் மத்திய அலைவரிசைகளைப் பிடித்துத் தரும் ரேடியோக்கள் சென்னை துவங்கி, தமிழகத்தின் கடைக் கோடி கிராமம் வரைக்கும் எந்தவொரு தெருவிலும் சத்தமாக கேட்கக் கூடிய பாடலாக ஒலித்த மச்சானைப் பாத்தீங்களா மலவாழத் தோப்புக்குள்ளே பாடல் மூலம் தன் இசை சாம்ராஜய்த்துக்கு அஸ்திவாரம் அமைத்துக் கொண்டவர் இளையராஜா.
ஆயிரம் திரைப் படங்க்ளுக்கு மேல் இசையமைத்தது, இராயல் சிம்பொனிக்கு இசைக்கோர்வை எழுதிக் கொடுத்தது, இருபதுக்கும் மேற்பட்ட தனி இசைத் தொகுதிகள் வெளியிட்டது திருவாசகத்துக்கு சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவை வைத்து இசையமைத்தது என அவர் தன் சாம்ராஜ்யத்தின் எல்லைகளை விஸ்தாரித்துக் கொண்டுவிட்டார். சொல்லப்போனால் எல்லைகளற்ற தேசமொன்றை தன் இசையால் உருவாக்கிவிட்டார் இளையராஜா.
அவரின் இசை மேதமை ஒரு சாதாரணனின் வார்த்தைகளுக்குள் அடங்காதவை எனினும் அவரது இசை அந்தச் சாதாரணனுக்காக மட்டுமே கடந்த நாற்பத்தேழு ஆண்டுகளாக இசைக்கப்படுகிறது. அவரின் இசை சந்தோசத்தைத் தரும். கண்ணீரைத் தரும். துன்பத்தைத் துடைத்து இன்பத்தை கொண்டு வந்து தரும். காதலைச் சொல்ல, பாசத்தைச் சொல்ல, இன்பத்தைச் சொல்ல, தன் துக்கத்தைச் சொல்ல, என கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாகத் தமிழன் தன் உணர்வுகளை அவரது இசையாலெயே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான்.
தமிழனின் வாழ்வியல் வரலாற்றை, இளையராஜாவுக்கு முன் இளையராஜாவுக்குப் பின் என இரண்டாகப் பிரித்துக்கொள்ள முடியும் என்று சொன்னால் அது நிச்சயம் பொய்யில்லை.
Yorumlar