9. Risk Appetite
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்.

Risk Appetite என்பதின் நேரடியான தமிழாக்கம் உங்களால் எவ்வளவு ரிஸ்க்கை செரிக்கமுடியும் என்பதே. நீங்கள் உடனே ரிஸ்க் எடுப்பதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுவது போல என்று கூறினீர்கள் எனில் அது சிரிப்பதற்கு வேண்டுமானால் உபயோகப்படும். ஆனால் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு சத்தியமாக உதவாது.
நீங்கள் பங்குச் சந்தையில் நேரடியாகவோ அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளின் மூலமாகவோ முதலீடு செய்வத்ற்கு முன்னர் உங்கள் ரிஸ்க் செரிமான அளவை தெரிந்து கொள்வது மிகமிக அவசியம்.
எப்படித் தெரிந்து கொள்வது.
1. உங்கள் தற்போதயச் சூழ்நிலை : உங்கள் வயதென்ன...உங்கள் வருமானத்தைச் சார்ந்து உங்கள் குடும்பத்தில் எத்தனை பேரிருக்கிறார்கள்.. உங்கள் தற்போதைய ஒட்டு மொத்த சேமிப்பின் தொகை எவ்வளவு. கடன் தொகை எவ்வளவு
2.முந்தைய அனுபவங்கள்: பங்குச் சந்தை குறித்த உங்களுடைய ஞானம். அந்த ஞானத்தை அறிவை வளர்த்துக் கொள்ள நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் இதற்கு முன் நீங்கள் செய்திருக்கும் முதலீடு.
3. முதலீடுகள் குறித்த உங்கள் தொலை நோக்கு பார்வை : உங்கள் முதலீடு எந்த தேவைக்காக.. அத்தேவைக்கான உங்கள் முதலீட்டின் கால அளவு... சமீபத்திய எதிர்காலத் தேவைகளுக்கான லிக்விட் பணத்திற்கான தேவை... வருமானத்தின் மீதான பங்குச் சந்தை முதலீட்டின் மீதான வரி விகிதங்கள்..
4. முதலீடு சம்பந்தமான உங்கள் அணுகுமுறை: எவ்வளவு தொகை வரை நீங்கள் ரிஸ்க் எடுக்கத் தயாராய் இருக்கிறீர்கள்.. அப்படி எடுக்கும் பொழுது வரும் சிறு சிறு நட்டங்கள் வந்தால் எப்படி எதிர் கொள்வீர்கள். இலாபங்கள் வந்தால் எப்படி அணுகுவீர்கள்....
போன்ற பல கேள்விகளின் மீதான பதில்களின் அடிப்படையில் ஒருவரது ரிஸ்க் செரிமானம் அளவிடப்படுகிறது.
இந்த பதில்கள் உங்களை மூன்று விதமான முதலீட்டாளர்களாக வகைப் படுத்திவிடும். இதை தேர்ந்த FINANCIAL ADVISOR இடமோ அல்லது பல இணைய தளங்களிலோ தெரிந்து கொள்ளலாம். இணைய தளங்களை விட தெரிந்த முதலீடு ஆலோசகரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.
1. A Conservative Investor: நீங்கள் உங்கள் பணத்தை பாதுகாப்பான முதலீட்டு முறைகளிலேயே முதலீடு செய்யத் தகுதியானவர். அதிக ரிஸ்க்கெல்லாம் எடுக்க முடியாது. உங்கள சூழ்நிலை உங்கள் அணுகுமுறையெல்லாம் பாதுகாப்பான முதலீட்டுக்கானவையே. எனவே பாதுகாப்பான முதலீடுகளில் அதிகம் பணத்தை முதலீடு செய்யுங்கள். குறைவான பணத்தில் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் ஈடுபடுங்கள்.
2. A Moderate Aggressive Investor: நீங்கள் முறைப்படுத்தப் பட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட ரிஸ்க் எடுக்கலாம். பாதிக்குப் பாதி பங்குச்சந்தை சார்ந்த முதலீட்டிலும் மீதியை பாதுகாப்பான முதலீட்டிலும் பணத்தை சேமிக்கலாம்.
3. Aggressive Investor: நீங்கள் அதிகப் படியான ரிஸ்க் டேக்கிங் ஆள். எனவே எழுபது சதவீதம் வரை பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டிலும் மீதியே பாதுகாப்பான முதலீட்டிலும் சேமிக்கலாம்.
உங்களை நீங்கள் வகைப் படுத்திக்கொண்டீர்களெனில் நீங்கள் உங்கள் பணத்தை கீழ்கண்டவாறு பிரித்து முதலீடு செய்யலாம்.
1. Aggressive
பங்குச் சந்தை(Equity) சாரந்த முதலீடுகள் 60-85%
கடன் பத்திரம் (Debt) சார்ந்த முதலீடுகள் 5-25%
மற்ற வங்கி அல்லது அஞ்சலக முதலீடுகள் 10-15%.
2. Moderate:
பங்குச் சந்தை(Equity) சாரந்த முதலீடுகள் 40-60%
கடன் பத்திரம் (Debt) சார்ந்த முதலீடுகள் 35-50%
மற்ற வங்கி அல்லது அஞ்சலக முதலீடுகள் 5-10%.
3. Conservative:
பங்குச் சந்தை(Equity) சாரந்த முதலீடுகள் 10-25%
கடன் பத்திரம் (Debt) சார்ந்த முதலீடுகள் 70-80%
மற்ற வங்கி அல்லது அஞ்சலக முதலீடுகள் 5-10%.
மியூச்சுவல் ஃபண்டை எப்படித் தேர்ந்தெடுப்பது... ??