top of page

8. ஃப்ண்டு வகைகள்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்.

8. ஃப்ண்டு வகைகள்.

பொதுவாக ஃபண்டுகளை Equity fund , Debt fund என்று மேஜர் வகைகளாகப் பிரித்திருப்பார்கள். இதில் Equity Fund என்பது பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள். இவற்றில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்கள் சார்ந்த Riskகள் உண்டு. DEBT FUND என்பவை கடன்பத்திரங்களில் (Debentures) முதலீடு செய்பவை. இவை நட்டத்தைத் தராதவை. Safe Investments. அதே சமயம் வங்கி வட்டி வீதங்களை விட அதிக இலாபம் தருபவை. ஆனால் பங்குச்சந்தை ஃபண்டுகளை விட இலாபம் குறைவாய்த் தருபவை.

Equity Fundகளை மேலும் Large Cap Mid Cap மற்றும் Multi Cap என்று வகைப் படுத்துவார்கள்
இவையெல்லாம் என்னென்ன..

ஒரு கம்பனி இருக்கிறது. அது தயாரிக்கும் பொருளுக்கு மக்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் இருக்கிறது. அப்படியானால் அந்த கம்பனி அந்த பொருளை நிறைய தயாரிக்க வேண்டும். நிறைய தயாரிக்க வேண்டுமானால் நிறைய மூலப் பொருட்கள் வேண்டும். நிறைய மூலப் பொருட்கள் வேண்டுமெனில் நிறைய மூலதனம் வேண்டும். அவ்வளவு மூலதனம் கம்பனி நடத்துபவர்களிடம் இல்லை. என்ன செய்வார்கள். கடன் வாங்குவார்கள் அல்லது கம்பனிக்கு பங்குதாரர்களை அதிகப்படுத்துவார்கள். அவர்களுக்குத் தேவையான மூலதனத்தை திரட்ட போதிய பங்குதாரர்கள் கிடைக்கவில்லை அதாவது கிடைத்த பங்குதாரர்கள் போதவில்லை. என்ன செய்வார்கள். பொது மக்களிடம் பணம் கேட்பார்கள். அவர்களுக்கு பங்குகள் பிரித்துக் கொடுப்பார்கள். இலாபத்தையும் பிரித்துக் கொடுப்பார்கள்.

இப்படி பொது மக்களிடம் இருக்கும் பங்குகளைத்தான் பங்குச் சந்தையில் வாங்குகிறார்கள் விற்கிறார்கள்.

பொதுவாக சந்தையில் எந்த பொருளுக்கு தேவை அதிகமாகவும் அப்பொருள் கிடைக்கும் அளவு குறைவாகவும் இருந்தால் அதன் விலை அதிகமாய்தானே இருக்கும். இல்லையா. அது போல பங்குச் சந்தையிலும் ஒரு பங்கின் விலை அதை எத்தனை பேர் வாங்கத் தயாராய் இருக்கிறார்கள் எத்தனை பேர் விற்கத்தயாராய் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து ஒரு பங்கின் விலை அதிகரிக்கும் இல்லை குறையும். ஒரு பங்கின் மூல விலையை விட பங்கின் மார்க்கெட் விலை என்பது முக்கியமான விசயம். மூல விலையையெல்லாம் மறந்தே விடுவார்கள். இன்றைய மார்க்கெட் விலைதான் முக்கியம். இதில் கம்பனிக்கு என்னய்யா இலாபம் என்று கேட்கிறீர்களா.

பொதுவாக கம்பனி தன் பங்குகளனைத்தையும் பங்குச் சந்தையில் வியாபாரத்திற்கு விட முடியாது. தோராயமாக நாற்பது அல்லது நாற்பத்தைந்து சதவீத பங்குகளை மட்டுமே பங்குச் சந்தைகளில் வாங்க விற்க என பொதுச் சந்தையில் இருக்கும். மீதி கம்பனிக்கு சொந்தமாய் உள்ள நபர்களிடமோ அல்லது அதற்கென உருவாக்கப்பட்ட ட்ரஸ்ட் போன்ற அமைப்பிடமோதான் இருக்கும். வெளிச்சந்தையில் விற்கும் விலையில் தான் சந்தையில் இல்லாத பங்குகளுக்கும் விலை. (அது விற்க வருமாயின்). இல்லையா. இப்போது கம்பனியிடம் இருக்கும் பங்குகள் தானே அதிகம். அதனால் யாருக்கு இலாபம். கம்பனிக்குத் தானே.
புரிகிறதா.

இப்படியான சந்தை விலையையும் சந்தையில் புழங்கும் மொத்த பங்குகளின் எண்ணிக்கையையும் பெருக்கினீர்களெனில் ஒரு தொகை வருமல்லவா. அதுதான் மார்க்கெட் கேப்பிட்டலைசேசன். (Market Capitalisation) .

Market Capitalisation = Current Market Price × total outstanding shares of the company.

இந்த மார்க்கெட் கேப்பிட்டலைசேசனின் அளவைக் கொண்டு பங்குச் சந்தையில் கம்பனி பங்குகளை LARGE CAP , MID CAP, SMALL CAP எனப் பிரிக்கிறார்கள்.

இப்படி லார்ஜ் கேப் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யும் ஃபண்டுகள் லார்ஜ் கேப் பண்டுகள் என்றும் மிட் கேப் கம்பனி பங்குகளில் முதலீடு செய்யும் ஃபண்டுகள் மிட் கேப் ஃபண்டுகள் என்றும் இரண்டு வகைகளிலும் முதலீடு செய்யும் ஃபண்டுகள் மல்டி கேப் என்றும் அழைக்கப் படுகின்றன.

ஏன் இப்படி வகைவகையாய் பிரித்து முதலீடு செய்கிறார்கள் என்று கேட்கிறீர்களா. Small Cap பங்குகளில் ரிஸ்க் அதிகம். லார்ஜ் கேப் பங்குகளில் ரிஸ்க் குறைவு.

அப்படியானால் லார்ஜ் கேப் பங்குகளாக வாங்கும் ஃபண்டில்முதலீடு செய்வது தானே சரி என்கிறீர்களா. அதுதான் இல்லை.
சரி இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று கேட்கிறீர்களா.

அதெற்கெல்லாம் முன் உங்கள் Risk Appetite அதாவது எவ்வளவு தூரம் ரிஸ்க் எடுத்தால் உங்களால் தாங்கமுடியும் என்பதைப் பொறுத்து இருக்கிறது.

ஒருவர் தனனுடைய Risk Appetite ஐ எவ்வாறு தெரிந்து கொள்வது ?

CONTACT

Tel: 9810488582| Tel: 7011144631 | sureshbarathan@gmail.com

Sign Up for Stay Connected

Thanks for submitting!

Follow me:

  • Black Facebook Icon
  • Black Twitter Icon

© 2022 by Suresh Barathan

bottom of page