top of page

6.Growth மற்றும் Dividend ஆப்ஷன்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்.

6.Growth மற்றும் Dividend ஆப்ஷன்கள்.

பொதுவாக கிட்டத்தட்ட எல்லா மியூச்சுவல் ஃபண்டுகளும் இரண்டு ஃப்ளேவர்களில் கிடைக்கின்றன. அவை தான் Growth option மற்றும் Dividend option.

ஃபண்ட் இலாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் போது இலாபத்தை பங்கு வைத்து கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள் அல்லவா. அதுகூடவே திடீரென ஒரு யூனிட்டு ஒரு ரூபாய் என(ஒரு உதாரணத்திற்காக) அதிகமாய் போனஸ் மாதிரி கொடுப்பார்கள்.
எதிலிருந்து கொடுக்கிறார்கள்.

பொதுவாக ஃபண்டில் சேரும் அத்தனை Pooled Moneyஐயும் முதலீடு செய்து விட மாட்டார்கள். லிக்விட் கேஷ் என கனிசமான தொகை ஒன்றை வைத்திருப்பார்கள். நான் சொன்ன உதாரணத்திலேயே பத்தாயிரம் ரூபாயில் ஒன்பதினாயிரம்தான் முதலீடு செய்வாரகள் எனச் சொன்னேனில்லையா. பத்தாயிரத்திற்கே அந்தக் கணக்கு போட்டோமென்றால் (உதாரணத்திற்குக் கூட) 12000 கோடி ரூபாய்களில் எவ்வளவு தொகை பங்குகளில் முதலீடு செய்யாமல் லிக்விடாக வைத்திருப்பார்கள் என யோசியுங்கள். இந்தப் பணம் யார் கையிலுமிருக்காது. வங்கியிலோ அல்லது வேறு விதமான உடனடி காசாகக் கூடிய முதலீடாய் இருக்கும். அந்த முதலீடு தரும் இலாபத்தை அவ்வப்போது பங்குதாரர்களுக்கே பிரித்துக் கொடுப்பார்கள். இதையே Dividend என்கிறார்கள். எப்போது தருவார்கள் எவ்வளவு தருவார்கள் இதெல்லாம் AMC தான் முடிவு செய்யும்.

முன்பெல்லாம் (ஏன் இப்போதும் கூட ) மியூச்சுவல் ஃபண்டுக்கு முகவர்கள் இருந்தார்கள். அவர்கள் எந்தெந்த ஃபண்டு AMC களுக்கு முகவர்களாய் இருக்கிறார்களோ அவை எல்லாம் Dividend அடிக்கடி கொடுப்பதாய்ச் சொல்லி வாங்க வைக்க முயற்சித்தார்கள். இப்போதெல்லாம் எல்லா விவரங்களும் இண்டர்நெட்டில். யாரும் யாரையும் ஏமாற்றி விட முடியாது.

அடிக்கடி Dividend கொடுக்கும் ஃபண்ட் நல்ல ஃபண்ட் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஃபண்டுகளை எதெதென் அடிப்படையில் தேர்ந்தெடுப்பது எப்படித் தேர்ந்தெடுப்பது இதைப் பற்றியெல்லாம் பின்னர் விவரமாய் சொல்கிறேன்.

இப்படிக் கொடுக்கப்படும் Dividend பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு வகை செய்கிறது Dividend Fund Option. இதை நீங்கள் Re-Invest ம் செய்து கொள்ளலாம். அப்படி செய்யும் போது Dividend பணத்திற்கு நிகரான யூனிட்கள் உங்கள் கணக்கில் வரவு வைத்துவிடுவார்கள். இது ஒரு வகை.

இந்த Dividend Payout option மிகப் பெரிய அளவில் முதலீடு செய்பவர்களுக்கு ஆதாயமாக இருக்கும். ஆயிரக் கணக்கில் இலட்சக் கணக்கில் Dividend வாங்குபவர்களெல்லாம் இருக்கிறார்கள். நாம் சிறு முதலீட்டாளர்கள். நமக்கு Dividend Payout எல்லாம் சரிப்படாது.
இந்த இலாபத்தை Nav உடன் இணையுமாறு செய்வது Growth Option. Dividend பணமும் NAV யில் இணைந்து NAV யின் மதிப்பு உயர்ந்துவிடும். இதுதான் சிறு முதலீட்டாளர்களுக்கு சரி.
அதனால்தான் உதாரணத்தில் (பாகம் 5ல்) Growth option Nav 30 ரூபாயிலும் Dividend option Nav 23 ரூபாயிலும் இருந்தது.

இது open ended fund களுக்கு மட்டுமே பொருந்தும். Closed Ended ஃபண்டுகள் எல்லாம் Growth option மட்டுமே. இன்னும் சில ஃபண்டுகள் இருக்கின்றன. அவற்றிற்கு லாக்-இன் ப்ரீயடுகள் உண்டு. Open Ended தான். எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ஆனால் லாக்-இன் ப்ரீயடு முடியும் வரை பணத்தை வெளியே எடுக்க முடியாது. இந்த வகை ஃபண்டுகளும் Growth optionல் மட்டுமே கிடைக்கும்.

சரி . SIP.. ???

CONTACT

Tel: 9810488582| Tel: 7011144631 | sureshbarathan@gmail.com

Sign Up for Stay Connected

Thanks for submitting!

Follow me:

  • Black Facebook Icon
  • Black Twitter Icon

© 2022 by Suresh Barathan

bottom of page