5. உதாரணத்திற்கென ஒரு ஃபண்ட்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்.

ஒரு மியூச்சுவல் ஃபண்டை எடுத்துக் கொண்டு அதன் புள்ளி விபரங்களைப் பார்ப்போம். இது உதாரணத்திற்காகவே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறதே தவிர முதலீட்டீற்கான பரிந்துரைக்காக அல்ல.
கோடெக் மஹிந்த்ரா அசெட் மேனேஜ்மெண்ட் கம்பனியால் நடத்தப்படும் Kotak Select Focus Fund Regular Plan என்ற ஒரு ஃபண்ட்.
இது ஒரு Equity Open Ended ஃபண்ட். இது 2009ஆம் வருடம் செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப் பட்ட ஒன்று. ஆரம்பிக்கப்பட்ட போது இதன் ஃபண்ட் மேனேஜர் யாரென்று தெரியவில்லை. ஆரம்பித்த ஆறாவது மாதத்திலிருந்து ஃபண்ட் வேல்யூ கடகடவென சரியத் துவங்கியது. அதிகபட்டசமாக -22% வரை சரிந்தது. அதற்கு பங்குச் சந்தைகளின் முக்கிய குறியீடுகளான SENSEX மற்றும் NIFTY50 இரண்டுமே இரண்டாயிரத்து பத்து பதினொன்றுகளில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்ததே காரணம். இரண்டு குறியீடுகளும் தோராயமாக 25% சரிவைச் சந்தித்தன.
பின்னர் பங்குச்சந்தை மெல்லச் சரிவிலிருந்து முன்னேறியது. ஃபண்ட் மேனேஜரும் மாற்றப்பட்டார்.
இப்போது இது ஒரு முண்ணனி ஃபண்ட். 2017 மே மாதம் 31ம் தேதி நிலவரப்படி இந்த ஃபண்டின் மொத்தச் சொத்துமதிப்பு 11042 கோடிகள். மொத்தம் 54 பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார்கள்.
HDFC, SBI, ICICI போன்ற வங்கித்துறை பங்குகள் மற்றும் HERO MOTOCORP, MARUTI SUZUKI போன்ற வாகனத்துறை பங்குகளிலும் அதிக பட்ச முதலீட்டை செய்திருக்கின்றனர்.
கடந்த ஒரு வருட காலத்தில் 27.93% சாதாரண வட்டியில் இலாபம் கொடுத்திருக்கிறது. கடந்த முன்று ஆண்டுகளில் 20.14% வருடாந்திர கூட்டு வட்டியில் இலாபம் தந்திருக்கிறது.
இதில் குறைந்த பட்சமாக ரூபாய் ஐந்தாயிரத்திலிருந்து முதலீட்டைத் துவங்கலாம். எஸ்ஐபி முறையில் சேமிக்க மாதம் குறைந்தது ஆயிரம் ரூபாயிலிருந்து ஆரம்பிக்கலாம். குறைந்தது ஆறு மாதத்திற்காகவது செலுத்த வேண்டும்.
நீங்கள் 01-06-2014 முதல் மாதாமாதம் ஆயிரம் ரூபாய் இந்த ஃபண்டில் முதலீடு செய்து வருகிறீர்கள் எனில் 01-06-2017ல் உங்களுடைய 36000 ரூபாய் முதலீடு 46000 ரூபாயாக மதிப்பு கூடியிருக்கும். ஒரு ஃபண்ட் நல்லதா இல்லையா என அதன் முந்தைய கால செயல்பாடுகளும் (Past Performance), முந்தைய கால ரிட்டர்ன்களுமே முக்கியமாக கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகின்றன.
இதன் ஃபண்ட் மேனேஜராக திரு. ஹர்ஷா உபாத்யாயா கடந்த 2012 லிருந்து இருக்கிறார். இது ஒரு நல்ல விசயம்.
இதன் Growth fund ன் தற்போதைய (ஜூன் 25 ஆம் தேதி 2017 வருடம் எழுதப்பட்டது )NAV 30.338. அதே Dividend fund ன் NAV 23.098.