top of page

3. பங்குச் சந்தை முதலீட்டுக்கென சில வரைமுறைகள்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்.

3. பங்குச் சந்தை முதலீட்டுக்கென சில வரைமுறைகள்.

பங்குச் சந்தை முதலீட்டுக்கென சில வரைமுறைகளை நமக்கு நாமே வகுத்துக் கொள்வது மிக மிக அவசியம். அவை என்னென்ன??

1. என்னுடைய எதிர்கால தேவை என்ன(What is my goal?) என்பதை நான் மிகத் தெளிவாக அறிந்திருக்கிறேன். அத்தேவைக்கு இவ்வளவு பணம் வேண்டுமென எனக்குத் தெரியும்.
அந்தப் பணம் எப்போது தேவை என்றும் தெளிவாய்த் தெரிந்திருக்கிறேன்.

2. அத்தேவைக்கான சேமிப்பை நான் என்னுடைய நிகழ்கால தேவைகளுக்குப் போக எஞ்சியிருக்கும் பணத்தில் மடடும்தான் முதலீடு செய்வேன். வேறு தேவைகளுக்கென வைத்திருக்கும் பணததை பங்குச் சந்தையில் முதலீடு செய்யமாட்டேன். அல்லது வேறு யாரிடமும் கடனாய்ப் பெற்ற பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்யமாட்டேன்.

3. என்னுடைய தேவையை நான் அடைந்தவுடன் அதற்காய் முதலீடு செய்த பணத்தை பங்குச் சந்தையிலிருந்து நான் வெளியிலெடுத்து விடுவேன்.

4. யாருடைய தூண்டுதலின் பேரிலும் அல்லது யாருடைய பரிந்துரையின் பேரிலும் நான் பங்குகளை தெரிவு செய்யமாட்டேன்.

5. முக்கியமாக நான் உணர்ச்சிவசப் பட்டு முதலீடு சம்பந்தமாக முடிவுகள் எடுக்க மாட்டேன்.
என மேற்சொன்ன ஐந்து விசயங்களிலும் சரிவர ஒத்துப் போகும் ஒருவரால் தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்து இலாபம் பார்க்க முடியும். ஆனாலும் மேற்சொன்னவற்றை விட இன்னும் பல விசயங்கள் அறிந்திருக்க வேண்டும் அல்லது அறிந்த பின் முதலீடு செய்ய வேண்டும்.

ஒரு பங்கை முதலீட்டுக்காக வாங்குமுன் அந்தக் கம்பனி என்ன தயாரிக்கறார்கள். அந்த தயாரிப்பின் மீதான தேவை எவ்வளவு இருக்கிறது. அதற்கு அவர்கள் எவ்வளவு முதலீடு செய்திருக்கிறார்கள். தயாரிப்பின் தரமென்ன. யார் யார் கம்பனியை நிர்வகிக்கிறார்கள். நிரவகிப்பவர் திறமையானவர்தானா. கம்பனியின் எதிர்காலத் திட்டமென்ன. அதை நோக்கிய கம்பனியின் பயணம் சரியாய் இருக்கிறதா. கம்பனியில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள். லேபர் ப்ராப்ளம் ஏதேனுமுண்டா. அந்தத் தயாரிப்பைச் சார்ந்த அரசு சார்ந்த அறிவிப்புகள் என்னென்ன..அந்த அறிவிப்புகளால் அந்த பொருள் விற்பனையிலோ அல்லது தயாரிப்பிலோ தேக்க நிலை வரக்கூடுமா கம்பனியின் கடந்த பல வருடங்களின் இலாபநட்ட கணக்குகள் என்ன சொல்கின்றன.. இந்தக் இம்பனிக்கு போட்டிக் கம்பனிகள் எவையெவை. அந்தப் போட்டிக் கம்பனிகளின் தயாரிப்புகளுக்கு இக்கம்பனி எவ்விதம் சரிக்குச்சரியான போட்டிகளை தருகிறது.

என்றெல்லாம் ஆராய வேண்டும்.

மேற்சொன்னவை தவிர டெக்னிகல் ஜார்கன்களில் சொல்லப்போனால்

Annualized earnig growth in last five years, Debt-Equity Ratio, Average Return on Equity, Interest coverage Ratio, Market Capitalization, Price to earnig growth என்று ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கின்றன.
அத்தனையும் அலசி ஆராய்ந்த பின்னரே பங்குச் சந்தையில் அந்த கம்பனியின் பங்கை வாங்க வேண்டும். வாங்கும் முன்னர் எவ்வளவு விசயங்களை கவனித்தோமோ அத்தனை விசயங்களையும் நம் பணம் முதலீட்டில் இருக்கும் போதும் கவனிக்க வேண்டும்.

"Don't put all your eggs in one basket." என்பது பழமொழி. அது பங்குச் சந்தைக்கும் பொருந்தும். எனவே வெவ்வேறு பங்குகளில் நம் பணத்தை முதலீடு செய்வது நல்லது. ஒரு பங்கிற்கே இத்தனை மெனக்கெடல்கள் எனில் பங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க நம்முடைய ஒரு நாளின் பெரும்பகுதியை இதற்கெனவே செலவிட வேண்டியிருக்கும்.
இதையெல்லாம் இதற்கெனப் படித்தவர்கள் செய்து பல இணையதளங்களில் இலவசமாக வெளியிட்டுள்ளார்கள். நாம் அவற்றைச் சென்று படித்தால் போதுமானது. அவர்கள் இப்படி எல்லாமே நல்லவிதமாக இருக்கும் கம்பனியின் பங்குகளை ப்ளூசிப் பங்குகளென வகைப் படுத்தி பட்டியிலிட்டிருக்கிறார்கள். அப்படி ப்ளூசிப் கம்பனி பங்குகளாக தெரிவு செய்து முதலீடு செய்யலாம். ஆனாலும் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பது மிக மிக அவசியம். இப் பங்குகளும் காளையின் வச்த்திலும் கரடியின் வசத்திலும் அகப்படும். அதாவது இந்தப் பங்குகளுக்கும் ஏற்ற இறக்கங்கள் உண்டு.

ப்ளூசிப் கம்பனிகளின் பங்கு விலை மற்ற கம்பனிகளின் பங்கு விலையை விட சற்று அதிகமாகவே இருக்கும். ஏனெனில் அக்கம்பனிகளின் செயல்பாடு நன்றாய் இருப்பதாய் நிருபிக்கப் பட்டுவிட்டதனால் அது ப்ளூசிப் பங்கு. எனவே அதை வாங்குவதற்கு போட்டிகள் இருக்கும். எனவே விலை அதிகமாய் இருக்கும். சப்ளை அண்ட் டிமாண்ட்டைப் பொறுத்துதானை விலை. இல்லையா.

பங்குச் சந்தை முதலீடுகள் மொத்தமாகச் செய்பவை. மாதாமாதம் முதலீடு என்பது சில காலம் முன்னர் வரை இல்லாமல் இருந்தது. இப்போது சமீப காலங்களில் அவற்றையும் அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். எனினும் பங்குகளின் விலை தோராயாமாக 200 லிருந்து ஏழாயிரம் எட்டாயிரம் வரை இருக்கின்றன. இன்றைய தேதியில் (22-06-2017) HUL பங்கின் விலை 160 ருபாய் 50 காசுகள். HDFC வங்கியின் பங்கு விலை 1654 ருபாய் 70 காசுகள். (உதாரணத்திற்காவே இந்த பங்குகளின் விலையைக் கொடுத்திருக்கிறேன். வாங்குங்கள் என்ற பரிந்துரைக்காக அல்ல.) அப்படியானால் நாம் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய எவ்வளவு பணம் ஒதுக்கவேண்டும். எவ்வளவு நாடகளாய் முதலீடு செய்தால் நல்ல தரமான பங்குகளை நம் கணக்கில் சேர்த்துக் கொள்ள முடியும். ஒரு உத்தேசக் கணக்கை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்.

அப்படியாயின் சிறு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யவே முடியாதா.. அவர்கள் பங்குச் சந்தையின் இலாப நட்டங்களை பகிரந்து கொண்டு சம்பாதிக்கவே முடியாதா.. இதற்கெல்லாம் வழியே இல்லையா..

CONTACT

Tel: 9810488582| Tel: 7011144631 | sureshbarathan@gmail.com

Sign Up for Stay Connected

Thanks for submitting!

Follow me:

  • Black Facebook Icon
  • Black Twitter Icon

© 2022 by Suresh Barathan

bottom of page