2. பங்குச் சந்தை முதலீடுகள்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்.

பதினைந்து சதவிகித வட்டி எங்கு கிடைக்கும்? யார் தருகிறார்கள். ?
பப்ளிக் ப்ராவிடண்ட் ஃபண்ட் (PPF) கூட 8.1 சதவிகிதம் வட்டிதான் தருகிறது. பின் என்ன செய்யலாம். இங்குதான் பங்குச் சந்தை முதலீடு வருகிறது.
நன்றாகப் படியுங்கள். பங்குச் சந்தை முதலீடு. பங்குச் சந்தை வர்த்தகம் அல்ல. இரண்டிற்கும் வேறு வேறு அர்த்தங்கள் இருக்கின்றன.
முதலீடு வேறு வர்த்தகம் வேறு. இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் எவ்வளவு நாள் பங்குச்சந்தையில் உங்கள் பணத்தை விட்டு வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து வேறுபடுகிறது.
ஒரேயொரு நாளுக்கென முதலீடு செய்வது வர்த்தகம். காலையில் பணம் போட்டு மாலையில் லாபமோ நட்டமோ எடுத்து விடுவது Day Trading. இந்த ஒரு நாள் வர்த்தகத்தில் பணம் போட்டே ஆகவேண்டுமென்று கட்டாயமெல்லாம் கிடையாது. பணமே இல்லாமல் வர்த்தகம் செய்யலாம். இலாபம் கிடைத்தால் இலாபம் மட்டும் வங்கிக்கணக்கில் வந்து விழுந்து விடும். நட்டமானாலோ எவ்வளவு நட்டமோ அதை மட்டும் செலுத்தினால் போதுமானது.
இதற்கெல்லாம் மிக மிக அதிகப் படியான பங்குச் சந்தை பற்றிய புரிதல்கள் அவசியம். எந்தப் பங்கு இன்று காளையின் வசம் எந்தப் பங்கு கரடியின் வசம். எப்போது காளையிடமிருந்து கரடி வசப்படும் அல்லது கரடியிடமிருந்து காளையின் கையில் பிடிபடும் என்றெல்லாம் கணிக்கத் தெரிய வேண்டும். இந்தப் புரிதல்கள் இல்லாமல் வெரும் பங்குச் சந்தையில் லாபமடைந்தவர்களின் கதைகளை மட்டும் கேட்டுவிட்டு இதில் இறங்கி பணமிழந்தவர்கள் மிக மிக அதிகம்.
நான் இந்த நாள் வர்த்தகத்தைச் சொல்லவில்லை.
மூன்று மாதங்களிலிருந்து ஆறு மாதம் ஒரு வருடம் அதற்கு மேலும் கால அவகாசங்களில் வர்த்தகம் பண்ணுவதே பங்குச் சந்தை முதலீடுகள் என அழைக்கப் படுகின்றன. மூன்று மாதம் வரை குறுகிய கால முதலீடு (Short Term) , மூன்று மாதங்களுக்கு மேல் ஒரு வருடம் வரையிலான முதலீடுகள் மீடியம் டேர்ம், ஒரு வருடத்திற்கு மேற்பட்ட முதலீடுகள் லாங் டேர்ம் என வகைப்படுத்தப் படுகின்றன.
பங்குச் சந்தை முதலீட்டுக்கென சில வரைமுறைகளை நமக்கு நாமே வகுத்துக் கொள்வது மிக மிக அவசியம். அவை என்னென்ன??