top of page

1. பண வீக்கம். (Inflation)

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள்.

1.  பண வீக்கம். (Inflation)

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைப் பற்றி அறிந்து கொள்ள முயல்வோருக்கான சிறு புரிதலை ஏற்படுத்தும் முயற்சி இது.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா கூடாதா. நல்லதா கெட்டதா.

அதற்கெல்லாம் முன்பு சில கேள்விகள்.

1.உங்களுக்கு சேமிக்கும் பழக்கமுண்டா.?

2. உங்கள் சேமிப்பு உங்கள் நோக்கத்தை தேவையை சரியாக நிறைவேற்றியிருக்கிறதா?
அல்லது சேமிப்பு போக இன்னும் அதிகம் பணம் தேவைப்பட்டதா?

3.பணவீக்கம் என்றால் என்ன?

சிறு சேமிப்பு என்பது நல்ல பழக்கம். மழைநாளுக்கென எறும்புகள் சேமிக்கின்றன. அதைப் போல நாம் நம் எதிர்கால அத்தியாவசியத் தேவைகளுக்கு சேமிப்பது மிகமிக அவசியம். ஆனால் அந்த சேமிப்பின் போது பணவீக்கத்தையும் கணக்கில் கொண்டு சேமிக்க வேண்டும். அப்போது தான் அது நம் தேவையை பூர்த்தி செய்யும்.

எனக்கு அடுத்த வருடம் ஜுலை மாதம் இரண்டு கிலோ ஆரஞ்சு பழங்கள் வேண்டும். இன்றைய விலை கிலோ ஐம்பது என்று வைத்துக் கொள்வோம். எனவே நான் நூறு ரூபாய் சேமிப்பில் வைக்கிறேன். அடுத்த வருடம் அந்த நுறு ரூபாயை அப்படியே எடுத்துக் கொண்டுபோய் ஆரஞ்சுபழங்கள் வாங்கப்போனால் அதன் விலை நூற்றியாறு ரூபாயாகி விட்டது. இந்த ஆறு ரூபாய் தான் பணவீக்கம்.

அப்படியானால் நான் நூறுக்குப் பதில் நூற்றியாறு ரூபாய் இன்றே சேர்க்க வேண்டும். அல்லது சேமிப்பிலிருக்கும் நூறு ரூபாயை ஆறுரூபாய் வட்டி வரும்படியான சேமிப்பு ஊடகத்தில் (Savings Instrument) நான் சேமிக்க வேண்டும்.

வங்கியின் சேமிப்பு கணக்கில் மூன்று சதவீதம் வட்டிதான் தருகிறார்கள். அதில் நூறு ரூபாய் நூற்றி மூன்றாய்த் தான் மாறும். அப்படியானால் அதிக வட்டி தரும் ஊடகம் அல்லது சாதனத்தை நான் தேரந்தெடுக்க வேண்டும். அவை என்னென்ன..

வங்கிக் கணக்கை விட அதிக வட்டி தருபவை Fixed Deposit மற்றும் Recurring Deposit கள். எட்டு சதவீதம் வரை வட்டி கிடைக்கும். இந்த வட்டிவிகிதங்களும் நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் இருக்கின்றன.

இரண்டு கிலோ ஆரஞ்சுப் பழங்களுக்கே வங்கி வட்டி விகிதத்தை விட அதிமாய் தேவைப்படுகையில் மற்ற செலவுகளுக்கு எவ்வளவு என்று யோசனை செய்து கொள்ள வேண்டும்.

சரி. இன்னொரு விசயம் ஒன்று பார்ப்போம். வங்கியின் சேமிப்பு கணக்கு நான்கு சதவிகிதம் வட்டி தருகிறது. அது சாதாரண வட்டி(Simple Interest). Fixed Deposit மற்றும் Recurring Depositகள் தருவது கூட்டு வட்டி (Compound Interest). கூட்டுவட்டியில் வட்டிக்கு வட்டியுண்டு. இது எல்லாரும் சிறு வயதில் கணக்குப் பாடத்தில் படித்ததே.

இந்த கூட்டு வட்டி கணக்கின் படி மாதம் பதினைந்தாயிரம் பதினைந்து சதவீத வட்டிவிகிதத்தில் பதினைந்து வருடத்திற்கு சேமித்தோமெனில் வட்டி வட்டிக்கு வட்டியெல்லாம் கணக்கிட்டால் எவ்வளவு வரும் தெரியுமா. ஊகிக்க முடிகிறதா. தோராயமாக ஒரு கோடி ரூபாய். மிகச் சரியாக கணக்கிட்டால் சற்று அதிகமாகவே.

பதினைந்து சதவிகித வட்டி எங்கு கிடைக்கும். யார் தருகிறார்கள் ?

CONTACT

Tel: 9810488582| Tel: 7011144631 | sureshbarathan@gmail.com

Sign Up for Stay Connected

Thanks for submitting!

Follow me:

  • Black Facebook Icon
  • Black Twitter Icon

© 2022 by Suresh Barathan

bottom of page