
Where stories unfold
புத்தகங்கள்
Currently We are shipping paper back books within India Only.
Read all updated Site Policies carefully before Shopping Paperback and e-Books
அறிமுகம்

நான் திருநெல்வேலி நகரத்தில், பொருணை நதிக் கரையோரம் அமைந்த வண்ணாரப்பேட்டையில் பிறந்தவன். அவ் வண்ணாரப்பேட்டை கிளை நூலகம் சார்ந்து இயங்கிய வாசகர் வட்டத்தின் சார்பில் 90களில் எரிதழல் எனும் கையெழுத்துப் பத்திரிக்கையை அதன் இணையாசிரியராய் இருந்து மூன்றாண்டு காலம் நடத்தினேன். கதைகளை, கவிதைகளை எழுதுவதைத் தவிர இந்திய அரசாங்கத்தில் கணிப்பொறித் துறையில் விஞ்ஞானியாக கடந்த இருபது வருடங்களாகப் பணிபுரியும் நான் தற்போது தில்லியில் வசித்து வருகிறேன்.
என்னுடைய முதல் புத்தகம் ஊர் நடுவே ஒரு வன தேவதை 2018 ல் வெளிவந்தது. அந்தப் புத்தகம் திகழி இலக்கிய அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட திகிழி 2019 விருதைப் பெற்றது.
என்னுடைய தேவதைக் கதைகள், கவிதையும் சூழலும், மியூச்சுவல் ஃபண்டுகள் சிறு அறிமுகம் போன்ற நூல்கள் அமேஸான் கிண்டில் பதிப்பாக வெளியாகியுள்ளன.
முதல் சிறுகதைத் தொகுப்பு "சந்நதம்" மற்றும் இரண்டாவது கவிதைத் தொகுப்பு "ஈரூசற்தாண்டவம்" போன்றவை தற்போது சென்னைப் புத்தகத் திருவிழாவில் வெளியாகியிருக்கின்றன.